2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பப் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த மாதம் 21 ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
அனைத்துப் பாடசாலை விண்ணப்பதாரர்களும் தங்கள் விண்ணப்பங்களை தங்கள் பாடசாலை அதிபர் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை உரிய அறிவுறுத்தல்களின்படி நேரிலும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.