16 வயது மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை: 8 பேருக்கு விளக்கமறியல்

ஹங்வெல்ல, எம்புல்கம பிரதேசத்தில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவரைக் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவியின் காதலன் உட்பட 8 பேரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹோமாகமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று திங்கட்கிழமை ஹோமாகமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஹோமாகமை பதில் நீதவான் பத்மசிறி ஜயவர்தன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 21 ஆம் திகதி தனது காதலனைச் சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர் மாணவியை பலாத்காரமாக மயானத்திற்கு அழைத்துச்சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்