-மஸ்கெலியா நிருபர்-
கண்டி மாவட்டம் கம்பளை நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில், குப்பைகள் நிரம்பி, பாரிய சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதாக பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ கம்பளை பேருந்து நிலையம் தொடர்பாக பல வருடங்களாக எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என, பேருந்து நிலைய வர்த்தகர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பேருந்து தரிப்பிடத்தில் பல பகுதிகளில் பாரிய அளவில் உக்கும் உக்கா குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
இதனால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் நோய்க்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி, பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை துப்பரவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
