-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம்-வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை, வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு, தொல்புரம் கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோயிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில், மயூரன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றைய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரதான சந்தேகநபர் உட்பட நால்வரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.