வெளிநாட்டு பெண்ணை அச்சுறுத்தி பெறுமதியான பொருட்கள் கொள்ளை

களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் வெளிநாட்டு பெண்ணொருவரை அச்சுறுத்தி பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 வயதுடைய நேபாளம் நாட்டுப் பெண் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் குறித்த ஹோட்டல் அறையில் தங்கியிருக்கும்போது அறையிற்குள் அத்துமீறி நுழைந்த நபரொருவர் இவரிடம் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி 10 இலட்சம் ரூபா பெறுமதியான பணம், நகை மற்றும் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ள நிலையில் களுத்துறை வடக்கு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்