7 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் வெளிநாட்டுப் பெண் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் இன்று திங்கட்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது சூட்கேஸின் அடிப்பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்து அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

2 கிலோ 450 கிராம் எடையுடைய ஏழு கோடியே முப்பத்தைந்து இலட்சம் ரூபா மதிப்புடைய போதைப்பொருளே இதன் போது மீட்கப்பட்டுள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரி தெரிவித்தார்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்