ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சகம், தனது கடல் எல்லைக்குள் 3 ஈரான் ஏவுகணைகளை இடைமறித்ததாகத் தெரிவித்துள்ளது.
மேலும் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து, டுபாய் மற்றும் ஷார்ஜாவுக்கான விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஃபுஜைரா எண்ணெய் துறைமுகம் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் 3 இந்தியர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தால் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மீட்புக் குழுக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.