பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து : 6 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தமிழ்நாடு சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பயங்கர வெடிவிபத்தில் 6 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மேலும் இவ்விபத்தில் காயமடைந்த 14 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கமலப்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 80  க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த ஆலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து நேரிட்டது.

இதில் 7 அறைகள் தரைமட்டமாகின, மேலும் 7 அறைகள் சேதமடைந்தன.

தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர்இ தீயைஅணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர், காயமடைந்த 14 பேர் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விதிகளை மீறி ஒப்பந்ததாரர் மூலம் குறித்த பட்டாசு ஆலை செயல்பட்டுள்ளமை முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சரவணன் மற்றும் மேலாளர் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன, என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்