நெடுங்குடியிருப்பில் தீ பரவல்: இருவர் பலி

கேகாலை மாவட்டத்தில் நெடுங்குடியிருப்பு ஒன்றில் இன்று புதன் கிழமை அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யட்டியாந்தோட்டை – பணாவத்தை 2ஆம் இலக்க தோட்டப் பகுதியிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

பணாவத்தை 2ஆம் இலக்க தோட்டத்தை சேர்ந்த 60 மற்றும் 50 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.

இந்தத் தீப்பரவலில் 3 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாகவும் தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யட்டியாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்