பரீட்சை எழுதிய மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு

க.பொ.த( சா/ த) 2023(2024) பரீட்சை எழுதிய மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பரீட்சை முடிவடைந்த பின் பாடசாலை சூழலை சிரமதானம் மூலம் சுத்தப்படுத்திய பின் தமது ஞாபகார்த்தமாக மரக்கன்றுகளை நாட்டியுள்ளனர்.

இந்த செயற்பாடு பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்