பதுளை நகரில் சுற்றிவளைப்பு: 7 சந்தேக நபர்கள் கைது

-பதுளை நிருபர்-

பதுளை நகரில் நேற்று ஞாயிற்று கிழமை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 6420 மில்லிகிராம் ஐஸ், 6040 மில்லிகிராம் ஹெரோயின், 50 மாத்திரைகள் மற்றும் 1000 மில்லிகிராம் கஞ்சாவுடன் 7 சந்தேக நபர்களை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பதுளை நகர் மஹியங்கன வீதி பிடவெலகம, சிங்கபுர, ஒலிமண்டிய மற்றும் எகொடவெல ஆகிய பகுதிகளில் வசிக்கும் 28, 46, 40, 21, 41 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்