மனித மூளையில் சிப் பொருத்த தயாராகும் எலான் மஸ்க்

6 மாதங்களில் மனித மூளையில் சிப் பொருத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று எலான் மஸ்க் (Elon musk)அறிவித்துள்ளார்.

எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம்,  மனித மூளையில் சிப் பொருத்தும் ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்ட சோதனை குரங்குகளை வைத்து நடைபெற்றது. இதில் கணினி மூலம் மூளையின் செயல்பாட்டை கட்டுப்படுத்தலாம் என்று உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது 6 மாதங்களில் மனித மூளையிலும் சிப் பொருத்தும் பணிகள் நடைபெறும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த சிப் மூலம் எண்ணங்கள் வழியாக கணினியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளமுடியும் எனவும், விரைவில் தானும் ஒரு சிப்பை தமது மூளையில் வைத்துக்கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சோதனைகளுக்கு 6 மாதங்களில் அனுமதி கிடைக்கும் என்றும் மஸ்க் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.