மர்மமான முறையில் யானை உயிரிழப்பு

-மூதூர் நிருபர்-

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறி மங்களபுர பகுதியிலுள்ள வயல் பகுதியில் யானையொன்று உயிரிழந்த நிலையில் காணப்படுகின்றது.

இந்த யானை நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த யானையின் தோல் பகுதியில் காயமொன்று காணப்படுகின்றது.

எனினும் குறித்த யானை எவ்வாறு உயிரிழந்தது என இதுவரை கண்டறியப்படவில்லை. உயிரிழந்த யானையானது தற்போது அவ்விடத்திலே காணப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை சேருநுவர வனஜீவராசிகள் அதிகாரிகளால் முன்னெடுக்கப்படுகின்றது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்