பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஈழத்தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட உமா குமரன், ஸ்ராட்போட் மற்றும் பௌவ் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட இவர் தன்னுடன் போட்டியிட்ட வேட்பாளர்களை விட பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
44.1 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட உமா குமரனுக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்