
வெசாக் நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு ஆளுநர்
-மூதூர் நிருபர்-
திருகோணமலை – சேருவில ரஜ மஹா விகாரையில் இன்று வியாழக்கிழமை வெசாக் பண்டிகை கொண்டாட்டம் இடம் பெற்றது.
இதன்போது குளிர்பானம், மதிய உணவு போன்ற தன்சல்கள் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.அத்தோடு வெசாக் கூடுகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன, அதிகளவான பொதுமக்கள் இங்கு வருகை தந்திருந்தனர்.
அத்தோடு கிழக்கு மாகாண ஆளுநர் செந்நில் தொண்டமான் சேருவில ரஜ மஹா விகாரைக்கு வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்