கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் கடந்த வியாழக்கிழமை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மது போதைக்கு அடிமையான நபர் தனது வீட்டில் தனிமையில் இருக்கும்போது வீட்டில் ஜன்னல் கண்ணாடியை கையால் ஓங்கி குத்தியுள்ளார்.
இதனால் முழங்கைக்கும் புஜத்துக்கும் இடையிலான தசைப்பகுதியின் நாடி நரம்பு அறுந்து விரைவாக குருதி வெளியேறி சம்பவ இடத்திலேயே இவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மது போதைக்கு அடிமையானவர் என்பதுடன் மனைவியுடன் அடிக்கடி தகறாறுகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினமும் மனைவியுடன் முறண்பட்டதையடுத்து மனைவி வீட்டை விட்டு வெளியேறியிருந்தமை தெரிய வந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்