மன்னார் மாவட்டத்தில் பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

-மன்னார் நிருபர்-

மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு விளையாட்டு துறை அமைச்சினால் வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு இன்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் .க. கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டு தமது பாடசாலைக்கான விளையாட்டு உபகரணங்களை பெற்று கொண்டனர்.

இதன் போது விளையாட்டு துறை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்