விளையாட்டினால் வீதி போக்குவரத்திற்கு இடையூறு

மைதானத்தில் விளையாட வேண்டிய விளையாட்டுக்களை பொதுப்போக்குவரத்து வீதியில் சட்டவிரோதமாக சிலர் குழுவாக கூடி விளையாடுவதை அன்றாட நடவடிக்கையாக கொண்டிருக்கின்றார்கள்.

காலை முதல் மாலை வரை பல்வேறு பகுதிகளில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்கதையாகி வருகின்றன.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பல வீதிகளிலும் கிரிக்கட் கால்பந்து பல்வேறு விளையாட்டுக்களை சிறுவர்கள் முதல் வயது வந்த பெரியோர்கள் வரை விளையாடி வருகின்றார்கள்.

ஆனால் இவ்வாறு விளையாடுபவர்களுக்கு பொதுப்போக்குவரத்தினை இடையூறு செய்வது தெரியாத விடயமல்ல.

இவ்வாறு அம்பாறை மாவட்டத்தின் முக்கிய வீதிகளில்  சட்டவிரோத விளையாட்டுக்கள் இடம்பெறுவதும் பின்னர் பிரச்சினைகளால் நிறுத்தப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளன.

எனவே இவ்வாறான வீதி விளையாட்டுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்