இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார் தோனி

2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு மஹேந்திர சிங் தோனி தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இறுதிவரை தன்னம்பிக்கையுடனும் நிதானத்துடனும் விளையாடி கிண்ணத்தை தாயகத்திற்கு பெற்றுக்கொடுத்தமைக்கு நன்றிகளையும் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் இது தனது பிறந்தநாளுக்கான சிறந்த பரிசாக அமையும் என மஹேந்திர சிங் தோனி இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்