பேருந்தில் கடத்திய மான் கொம்பு: ஒருவர் கைது

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பேருந்தில் மான் கொம்பு கொண்டுவரப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது, மான் கொம்பு கொண்டுவந்தவர் பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும்,கைது செய்யப்பட்ட 42 வயதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்