டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த பிரிவின் தரவுகளுக்கமைய கடந்த வருடம், முதல் 6 மாதங்களில் 47,732 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்தநிலையில், இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 27,755 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்