Sri Lanka Tamil News Site

யானை தாக்கி கடற்படை சிப்பாய் உயிரிழப்பு

- Advertisement -

 

-மன்னார் நிருபர்-

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையில் இருந்த கடற்படை சிப்பாய் ஒருவர் மீது நேற்று செவ்வாய்க்கிழமை மாலை யானை தாக்கிய நிலையில், குறித்த கடற்படை சிப்பாய் உயிரிழந்துள்ளார்.

- Advertisement -

உயிரிழந்த கடற்படை சிப்பாய் பொல் பித்திகம மெலியா பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ்.பி.ரத்நாயக்க (வயது -41) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலாபத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை  மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யானை தாக்கி கடற்படை சிப்பாய் உயிரிழப்பு

 

- Advertisement -