
குளத்திலிருந்து சடலம் மீட்பு
-பதுளை நிருபர்-
பதுளை கெலன் கோபோ தோட்ட குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக கஹட்டருப்ப பொலிஸார் தெரிவித்தனர்.
கும்புரேகெதர மஹகும்புர கஹட்டருப்ப பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுமார் 2 தினங்களுக்கு முன் கெலன் கோபோ தோட்ட பகுதியில் அமைந்துள்ள குளத்துக்கு அருகாமையில் சட்டை மற்றும் பணம் ஆகியவை காணப்பட்டதாக கஹட்டருப்ப பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இராணுவத்தினரின் உதவியுடன் குறித்த குளத்தில் தேடுதலை மேற்கொண்டு வந்ததாகவும், இருப்பினும் குறித்த நபரின் சடலம் நேற்று மாலை வரை கிடைக்கவில்லை எனவும் கஹட்டருப்ப பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இருப்பினும் இன்று சனிக்கிழமை காலை குளத்தில் சடலம் மிதந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .
சடலம் நீதிவான் பார்வையின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூற்று பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக கஹட்டருப்ப பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை கஹட்டருப்ப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்