பொதுக் கழிப்பறையில் மீட்கப்பட்ட முதியவரின் சடலம்

நுவரெலியா பேருந்து நிலையத்தின் பொதுக் கழிப்பறையில் உயிரிழந்த நிலையில் நேற்று புதன் கிழமை நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ருவன்எலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பேருந்து நிலையத்தின் பொதுக் கழிப்பறையில் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக நேற்று மாலை பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில், 1990 எம்புலன்ஸ் சேவை குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, குறித்த நபர் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்