இந்தியாவில் நான்கில் ஒருவரை அச்சுறுத்தும் சைபர் தாக்குதல்

இந்தியாவில் வசிக்கும் நான்கில் ஒருவர் சைபர் அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டதாக சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் (ஜனவரி – மார்ச்) நான்கில் ஒரு இந்தியர் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஸ்பர்ஸ்கை என்ற உலகளாவிய புகழ் பெற்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் தன்னுடைய காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் வசிக்கும் 22.9 சதவீத யூசர்களுக்கு சைபர் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 20.1 சதவீதம் யூஸர்கள் சைபர் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடக்கும் சைபர் தாக்குதலில் 4ல் ஒருவர் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தரும் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

இன்றைய நிலையில் இணையத்தின் பயன்பாடானது நமது வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கம் ஆகிவிட்டது. அந்த அளவிற்கு நம்முடைய தினசரி வாழ்க்கையில் இன்டர்நெட் தனது பங்கை செய்து வருகிறது. அதே சமயத்தில் இன்டர்நெட்டினால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்து அதிகரித்து வருவதை யாராலும் மறுக்க இயலாது. அதிலும் குறிப்பாக முழுக்க முழுக்க டிஜிட்டல் பரிணாமத்திற்கு மாறிவரும் இந்தியா போன்ற நாடுகளில் இன்டர்நெட் மூலமாக செய்யப்படும் சைபர் அச்சுறுத்தல்கள் ஏற்படுவதும் அதிக அளவில் இருப்பதாக சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரியப்பட்டுள்ளது.

இந்தியாவில் வசிக்கும் நான்கில் ஒருவர் சைபர் அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டதாக சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது அதாவது இந்த வருடத்தின் முதல் காலாண்டில் (ஜனவரி – மார்ச்) நான்கில் ஒரு இந்தியர் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஸ்பர்ஸ்கை என்ற உலகளாவிய புகழ் பெற்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் தன்னுடைய காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் வசிக்கும் 22.9 சதவீத யூசர்களுக்கு சைபர் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 20.1 சதவீதம் யூஸர்கள் சைபர் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் இந்த மால்வேர் (Malware) தாக்குதல்கள் மிகப்பெரிய சவாலாக மாறி வருகிறது. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தேனீக்கள் போல குடிகொண்டிருக்கும் இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் ஏற்பட்டுள்ள இத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல் இங்குள்ள பெரிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்