Sri Lanka Tamil News Site

வாங்கிய போதைப்பொருளுக்கு பணம் கொடுக்காததால் குழந்தை கடத்தல்

- Advertisement -

வாங்கிய போதைப்பொருளுக்கு பணம் கொடுக்காததால் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று நீர்கொழும்பு பகுதியில் பதிவாகியுள்ளது.

நீர்கொழும்பில் வர்த்தகர் ஒருவரின் மகன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நிலையில், கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள பெண்ணொருவரிடம் இருந்து போதைப்பொருள் பெற்றுள்ளார்.

அதற்கான பணத்தைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக குறித்த வர்த்தகரின் பேரனான பத்து வயதுடைய ஆண் குழந்தையை குறித்த பெண் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

பின்னர்,   குழந்தை கிராண்ட்பாஸ் ரண்டிய உயன பகுதியில் உள்ள வீட்டுத் தொகுதியில் தடுத்து வைக்கப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான பெண் வர்த்தகருடன் தொடர்பு கொண்டு அவரது மகன் பெற்ற போதைப்பொருளுக்கு பணம் கேட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், குறித்த வீட்டுத் தொகுதியை நேற்று வியாழக்கிழமை சோதனையிட்டு, குழந்தையை மீட்டுள்ளனர்.

குழந்தையை கடத்தியதாக கூறப்படும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணையும் கிராண்ட்பாஸ் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -