Sri Lanka Tamil News Site

சிற்றுண்டிச்சாலை உரிமையாளரை சுட்டுக்கொன்ற சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலி

- Advertisement -

ஹங்வெல்ல பகுதியில் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஒருவரை சுட்டுக்கொன்ற சந்தேகநபர், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 18 ஆம் திகதி ஹங்வெல்லை – ஹரஸ்பார பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தேடப்பட்ட வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

- Advertisement -

உயிரிழந்தவர் உடகரவிட்ட – பிட்டகந்த பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த குற்றம் சுமத்தப்பட்டவரை, கைது செய்ய பொலிஸார் சென்றபோது, அவர் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும், இதனையடுத்தே பொலிஸார் அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -