பாதிப்படையும் தென்னை பயிர்ச்செய்கை: கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்

அநுராதபுரம் – பலாகல பகுதியில் தென்னை பயிர்ச்செய்கைக்கு ஒரு வகை பூச்சி இனங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த பூச்சியினம் மிக வேகமாக பரவி வருவதுடன் தென்னை செய்கையை அது முற்றாக அழித்து விடும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் முலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த பூச்சி இனம் வாழை, மா, அன்னாசி, எலுமிச்சை மரங்கள் மற்றும் பூந்தோட்டங்களிலும் பரவி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அது தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கான உரிய தீர்வை விவசாய அதிகாரிகள் பெற்றுத்தர வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்