டிவி விழுந்து பலியான குழந்தை

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை ஒன்றரை வயது குழந்தை மீது டிவி விழுந்ததில் குழந்தை உயிரிழந்துள்ளது.

கொச்சின் துறைமுக நகருக்கு அருகில் உள்ள மூவாட்டுப்புழாவில் வசித்து வரும் அனாஸ் என்பவரின் அப்துல் சமத் என்ற ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை மீது டிவியானது அதன் மேசையுடன் விழுந்த நிலையில் படுகாயமடைந்த குழந்தை உடனடியாக அப்துல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மேலும், டிவி வைக்கப்பட்டிருந்த மேசையை குழந்தை அசைத்ததால் டிவி விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்