![](https://minnal24.com/wp-content/uploads/2024/06/Untitled-design-11-1.png)
இரசாயனக் கசிவு: 30 பேர் பாதிப்பு
பாணந்துறை, நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட இரசாயனக் கசிவு காரணமாக 30 பேர் சுகயீனமடைந்துள்ளதாக பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒரு குழுவினர் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மற்றுமொரு குழு தனிப்பட்ட சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாசனைத் திரவியங்கள் மற்றும் ஏனைய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றில் கலவை தயாரிக்கும் போது இரசாயன பொருளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்