கிழக்கு தமிழர் கூட்டமைப்புக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் முன்னெடுத்த சதிமுயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்துள்ளன என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைக்கு தவிசாளர் மற்றும் பிரதித்தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை பிரதேச சபை சபா மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பூ.பிரசாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
எந்தவொரு உள்ளுராட்சி சபையும் கிழக்கு தமிழர் கூட்டமைக்கு கிடைத்து விடக்கூடாது என்று கடந்த இரண்டு மாதங்களாக சாணக்கியன் அவர்கள் பல முயற்சிகளை செய்தார் எனினும் வாகரையில் அதிகாரம் எமக்கு கிடைத்துள்ளது.
ஆகவே கடந்த ஆட்சியில் வாகரையில் இலங்கை தமிழரசுக்கட்சி செய்யாத அபிவிருத்திகளை இனி நாங்கள் செய்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.