இரவு நேரத்தில் வீதியில் நடமாடும் கால்நடைகள்: மக்கள் விசனம்

-தம்பிலுவில் நிருபர்-

இரவு நேரத்தில் வீதி நடமாடும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடும் கால்நடைகளால் வாகனம் செலுத்துவர்கள் பல அசோகரியங்களுக்கு முங்கொடுக்கின்றனர்.

இதேவேளை இன்று திங்கட்கிழமை காலை தம்பிலுவில் பொத்துவில் பிரதான வீதியில் தம்பிலுவில் சரஸ்வதிவித்தியாலயத்திற்கு முன்பாக மூன்று மாடுகள் விபத்துக்குள்ளாகி உயிழந்த நிலையில் காணப்பட்டது.

இவ்வாறாக கால் நடைகள் தம்பிலுவில் திருக்கோவில் விநாயகபுரம் போன்றபகுதிகளில் இரவு நேரங்களில் நடமாடுவதாக பொது மக்கள் தெரிவிக்ககின்றனர்.

மேலும் இதற்கான சரியான சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு உரிய கால்நடை உரிமையாளர்களுக்கு வழக்கு தொடர வேண்டும் என பொதுமக்களும் பாதைசாரிகளும் விசனம் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்