வாகன விபத்து: 8 பேர் பலி

இந்தியாவின் இந்தூர் பகுதியில் நேற்று புதன் கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

இந்தூர் – அஹமதபாத் அதிவேக நெடுஞ்சாலையில் ஜீப் வாகனத்துடன் அடையாளம் தெரியாத வாகனமொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அத்துடன் குறித்த விபத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் அடையாளம் தெரியாத வாகனத்தின் சாரதி விபத்திற்கு பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்