கிளிநொச்சியில் கஞ்சா மீட்பு

கிளிநொச்சியில் ஒரு கிலோ 760 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனகபுரம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்த முற்பட்ட வேளையில் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளையும் ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவையும் விட்டு தப்பி சென்றுள்ளார்.

இதேபோன்று விவேகானந்தா நகர் பகுதியில் வைத்து கிளிநொச்சி பொலிஸ் மது ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து வீதியால் சென்று கொண்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலையடுத்து இரண்டு பேரையும் சோதனைக்கு உட்படுத்திய போது அவர்களிடமிருந்து 260 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்