கலை,இலக்கியம் மற்றும் ஊடகம் சார்ந்த துறைகளில் இளைஞர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கான தேசிய ரீதியிலான போட்டி வாய்ப்புகளில் களங்களை ஏற்பாடு செய்யவும் புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி தற்போது பயிற்சி திட்டங்களை அறிமுகம் செய்ய முன்வந்துள்ளது.
நடனம்,நடிப்பு,படைப்பாக்கம், இசை, ஊடக தொழில்நுட்பம் சார்ந்த குழுக்களை உருவாக்கவும்
இதற்கான பயிற்சிகளை வழங்கவும் விளையாட்டு மற்றும் சிலம்பம் போன்ற துறைகளில் இளையவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
எனவே,ஆர்வமுள்ள இளைஞரகள் குறிப்பாக 16 வயதுக்கு மேற்பட்டவர்களும் 27வயதுக்கு உட்பட்டவர்களும்
இந்த வாய்ப்பினை பெற்றுக் கொள்ள முடியும்.
வரும் சித்திரை புத்தாண்டு முதல் இதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பமாகவுள்ளதால் விரும்புவோர் உடன் 075 4880172 என்ற வட்சப் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெறலாம் என அறியத் தரப்படுகிறது.