அரச நிறுவனங்களில் தற்காலிக, பதிலீடு, ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் சுமார் 9,800 ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பல்வேறு அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் நீண்டகாலமாக நிரந்தர நியமனங்கள் இன்றி பணியாற்றி வந்த சுமார் 9,800 ஊழியர்களுக்கு இந்தத் தீர்மானத்தின் ஊடாக நிவாரணம் கிடைக்கவுள்ளது.
இதுவரை காலமும் தினக்கூலி அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றியவர்கள் இந்த புதிய நடைமுறையின் கீழ் நிரந்தர சேவையில் உள்வாங்கப்படவுள்ளனர்.
இந்த ஊழியர்களை நிரந்தரமாக்கும் செயற்பாடுகளை முறைப்படுத்துவதற்காக, உரிய அரச நிருவாக சுற்றுநிருபத்தை உடனடியாக வெளியிடுவதற்கு அமைச்சரவை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
நீண்டகாலமாக தொழில் பாதுகாப்பு இன்றி பணியாற்றி வந்த இந்த ஊழியர்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.