-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.15 மணியளவில், காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்தும் அரச பேருந்தும், ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேளை, மானிப்பாய் அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியது.
தனியார் பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட அரச பேருந்து, முன்னால் வந்த காருக்கு இடம் கொடுக்க முற்பட்ட வேளை இந்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த வீதியில் விபத்து இடம்பெற்ற பகுதியானது, முந்தி செல்ல உகந்த இடமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.