ரயிலுடன் மோதிய பேருந்து: 6 பேர் பலி

ஸ்லோவாக்கியாவில் ரயிலுடன் பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் பிரட்டிஸ்லாவாவிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோவ் சாம்கி நகரில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் பேருந்தில் 9 பேரும், ரயிலில் 200 பேர் வரையிலும் பயணித்துள்ளதுடன் இதில் பலர் காயம் அடைந்துள்ள நிலையில், அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் உயிரிழந்தவர்கள் அனைவரும் பேருந்தில் பயணித்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்