பாரவூர்தியும் பேருந்தும் மோதி விபத்து: 14 பேர் பலி

மேற்கு உக்ரைனில் எரிபொருளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும், சிறிய பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

எதிர்திசையில் இருந்து வந்த வாகனங்கள் வரிசையை நோக்கி பாரவூர்தி செலுத்திப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனர்.

சாரதிகள் உள்ளிட்ட இரண்டு வாகனங்களில் பயணம் செய்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில் குற்ற வழக்கினை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்