பேருந்து விபத்து: மூவர் பலி

கிளிநொச்சி மாங்குளம் ஏ9 வீதியில் நேற்று செவ்வாய் கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிர் இழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னால் பயணித்த பாரவூர்தி மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் போது காயமடைந்த இருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்