பேருந்து விபத்து: 6 சிறுவர்கள் பலி

சிரியாவில் 50க்கும் மேற்பட்ட சிறுவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் சிரியாவின் டார்குஷ் அருகே ஒரோன்டெஸ் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், சிரிய சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் குழு, சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க