பேருந்து விபத்து: 11 பேர் காயம்

-பதுளை நிருபர்-

வெலிமடை அம்பகஸ்தோவ பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்து வெலிமடை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 7 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிமடை அம்பகஸ்தோவ வீதியின் தரகல பகுதியில் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த பேரூந்து பின்னால் வந்து கொண்டிருந்த மற்றைய பேரூந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்