பற்றி எரிந்த தென்னை மரம்: ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை தென்னை மரமொன்று மின்னல் தாக்கி தீடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பமான கால நிலை நிலவி வரும் நிலையில் நேற்று உடுவில் பகுதியில் இடி மின்னலுடன் மழை பொழிந்துள்ளது.

இதன்போது, மின்னல் தாக்கத்தால் வீடொன்றில் இருந்த தென்னை மரம் தீப்பற்றி எரிந்துள்ளதோடு, நபர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஒருவர் காயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்