காசா (Gaza) பகுதியில் ஊடகவியலாளர்கள் செலுத்தும் மனிதாபிமான விலையை மையமாகக் கொண்ட புதிய மேடை நாடகமான ‘Bulletproof Vests’ (குண்டு துளைக்காத அங்கிகள்), வரும் 2026 மே 10 சனிக்கிழமை அன்று கொழும்பு BMICH வளாகத்தில் உள்ள புதிய திரையரங்கில் (New Theatre) அரங்கேறவுள்ளது.
கொழும்பு போர்ட் (Colombo Fort) மற்றும் கொழும்பு நோர்த் (Colombo North) ரோட்டராக்ட் கிளப்களின் (Rotaract Clubs) கூட்டு முயற்சியான ‘Charitable 2026’ திட்டத்தின் ஒரு அங்கமாக இது மேடையேற்றப்படுகிறது.
முர்தாஸ் அப்துல் பாரி (Murthaaz Abdul Barry) தொகுத்து இயக்கியுள்ள இந்த நாடகம், உலகின் மிக மோசமான இனப்படுகொலைகளுக்கிடையே துணிச்சலுக்குப் புதிய அர்த்தம் கொடுத்த கசாவின் ஆறு ஊடகவியலாளர்களின் கதைகளைக் கூறுகிறது.
உண்மையான உயில்கள், கடிதங்கள் மற்றும் பகிரங்க அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படப் பாணியிலான காட்சிகள் மூலம், போரினால் நசுக்கப்பட்ட குரல்களை இந்த நாடகம் எதிரொலிக்கிறது.
“உண்மை இடிபாடுகளுக்குள் புதைக்கப்படும் போது அதற்கு என்ன நடக்கும்?” என்ற அழுத்தமான கேள்வியை இது பார்வையாளர்களிடம் முன்வைக்கிறது.
2023 முதல் கசாவில் 290 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நாடகம் பின்வரும் ஆறு நபர்களின் வாழ்வியலைச் சித்தரிக்கிறது:
ஷிரீன் அபு அக்லே (Shireen Abu-Akleh) – பலஸ்தீனத்தின் மகள்
பாத்திமா ஹசூனா (Fatima Hassouna) – கசாவின் கண்கள்
அனஸ் அல்-ஷெரீப் (Anas Al-Sharif) – கசாவின் குரல்
மரியம் அபு தக்கா (Mariam Abu Dagga) – ஊடக சுதந்திரத்தின் நாயகி
சலே அல்-ஜஃபராவி (Saleh al-Jafarawi) – உண்மையின் தியாகி
பிசான் அவ்வாடா (Bisan Owda) – அடுத்த தலைமுறை
மஷிகா மெத்மினி, ஹிருபா கித்மினா, கவிஷ்க லோச்சனா மற்றும் சதீப விக்ரமகே ஆகியோருடன் விருந்தினர் கலைஞர்களாக விஷி மற்றும் நிபுணி சாரதா ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.
இயக்குநர் முர்தாஸ் அப்துல் பாரி, ஒரு தசாப்த கால அனுபவமுள்ள கலைஞர் மற்றும் செயற்பாட்டாளர் ஆவார். மலேசியாவில் நடைபெற்ற நாடற்றவர்களுக்கான உலக மாநாடு மற்றும் ருவாண்டாவில் நடைபெற்ற உபுமுண்டு கலை விழா ஆகியவற்றில் இவர் சர்வதேச அளவில் பணியாற்றியுள்ளார்.
இலங்கையில் ‘Stages Theatre Group’ இன் இளைஞர் குழுவை வழிநடத்தும் இவர், ‘இலங்கை சுதந்திர பலஸ்தீன இயக்கத்தின்’ (Free Palestine Movement of Sri Lanka) தீவிர உறுப்பினருமாவார்.
நிகழ்ச்சி விபரங்கள்
திகதி: 2026 மே 10, சனிக்கிழமை
நேரம்: மாலை 4:30 மணி முதல்
இடம்: புதிய திரையரங்கு (New Theatre), BMICH, கொழும்பு
மேலதிக தகவல்களுக்கு: +94 75 133 4918 | +94 72 204 0786 | +94 75 493 4871