முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை ஒன்றில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் லஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை முன்னிலையாகியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையில், சட்டரீதியான காரணங்களினால் அவரால் முன்னிலையாக முடியாது என ஆணைக்குழுவுக்குக் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.