கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு சோதனை

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானதை அடுத்து, அங்கு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து பொலிஸார் மற்றும் வெடி குண்டு செயலிழப்புப்பிரிவு உள்ளிட்ட அதிகாரிகள் குழு அங்கு சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் குறித்த அழைப்பை எடுத்தவர் தொடர்பான விசாரணைகளைக் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்