நோயாளர் விடுதியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஜீவராஜா (வயது – 34) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக நுழைவாயில் காப்பாளராக கடமையாற்றிய இளைஞன் மன அழுத்தம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த இளைஞன் வைத்தியசாலையின் 12 ஆம் விடுதியில் அனுமதிக்கபட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலை நோயாளர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்