ஜனாதிபதிக்குப் பில்லிசூனியம்: இரு அமைச்சர்கள் கைது

மாலைத்தீவு ஜனாதிபதி முய்சுவிற்கு எதிராக ப்ளக் மெஜிக் மூலம் பில்லிசூனியம் வைக்க முயன்றதாகத் தெரிவித்து அவரது கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்கள் அந்நாட்டுக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் ஷாம்னாஸ் சலீம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சராகப் பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இந்த இருவரும் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் 7 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்