-கல்முனை நிருபர்-
களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.உதயசூரிய வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, பெரிய கல்லாறு கிராமத்தில் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் ஜீவிதன் தலைமையிலான டெங்கு ஒழிப்பு செயலணிக்குழுவினர் வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
இதன் போது, டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருந்தோருக்கு எதிராக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதுடன், சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
பிரதேசத்தில் தற்போது மழையுடன் கூடிய கால நிலை நிலவி வருவதினால் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் இருப்பதாகவும், நீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்களை இனங்கண்டு அவற்றை துப்பரவு செய்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.