மட்டக்களப்பு “93 நண்பர்கள்” அமைப்பினால் நடமாடும் மருத்துவ முகாம்
மட்டக்களப்பு “93 நண்பர்கள்” அமைப்பினால் மட்டக்களப்பு மேற்கு வலய 40 வட்டை விபுலானந்தா வித்யாலயத்தில் நடமாடும் மருத்துவ முகாம் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
இந்த வைத்திய முகாம் சிறப்பாக நடைபெறுவதற்கு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலுடன் மகிழடி தீவு ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் உதவியுடனும் பொது சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலக ஊழியர்களின் உதவியுடனும் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர், சமூகத்தினர் இம்மருத்துவ முகாமினால் பெரிதும் பயனடைந்தனர். பல் மருத்துவம், பொது சுகாதார பரிசோதனை, மாணவர்களுக்கான விழிப்பூட்டல், சத்துமா வழங்குதல், மருத்துவ ஆலோசனைகள், இனங்கானப்பட்ட நோய்களுக்கான மருந்துகளும் மேலதிக இனங்கானப்பட்ட நோய்களுக்கு மகிழத் தீவு ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளுக்கு சென்று மேலதிக சிகிச்சைகளைப் பெற ஆலோசனைகளும், பரிந்துரைகளும் வைத்தியர்களால் வழங்கப்பட்டது.
பாடசாலை அதிபர், மற்றும் ஆசிரியர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், மகிழடித்தீவு வைத்தியசாலை ஊழியர்கள் பங்களிப்புடன் மட்டக்களப்பு 93 நண்பர்கள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட வைத்திய முகாம் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.